கர்நாடக சட்டசபையில் அம்மாநில முதல்வர் குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது இன்று நாலாவது நாளாக விவாதம் நடைபெற்றுக்கொண்டுவருகிறது.
இந்நிலையில் இந்த விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, தமிழகத்தின் அரசியல் நிலைமையை சுட்டிக்காட்டி பேசினார். அதில் தமிழகத்தில் 18 எம் எல் ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தந்த ஆதரவை விலக்கிக் கொண்ட போது, தமிழக ஆளுநரிடம் தமிழக முதல்வருக்கு எதிராக கடிதம் அளித்த18 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். அவ்வாறு 18 பேரை தகுதி நீக்கம்செய்த போது கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. இந்த தகுதி நீக்க உத்தரவை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில் ஒருவர் ராஜினாமா செய்யும் போது முழுமனதுடன் திறந்த புத்தகமாகவே தரவேண்டும். ஒருவேளை ராஜினாமாவுக்கு முன்னர் குதிரை பேரம் நடந்தது எனில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு முழுஅதிகாரம் உண்டு. ஆதனால் பணம், ஆசை பதவி ஆசை காட்டி எம். எல்.ஏக்களை பாஜக கட்சியினர் வாங்குவதை சபாநாயகர் தடுக்க வேண்டும். ஜனநாயகத்தை சபாநாயகர் காப்பாற்ற வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்தார்.
இந்நிலையில் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தின் போது யமுதல்வர் குமாரசாமி மிகவும் உருக்கமாக பேசினார்.
அவர் கூறியதவது :
அரசியலுக்கு வர ஆசை இல்லை என்றாலும் காலத்தின் கட்டாயத்தினால் அரசியலுக்கு நுழைந்தேன். காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி ! நான் அரசியலுக்கு வருவதை விரும்பாதவன். என்னுடைய ஆட்சியில் பங்கெடுத்த உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி.
வாழ்க்கையில் நான் பல தவறுகளை செய்துள்ளேன். பல நல்ல விசயங்களை செய்துள்ளேன்.கடந்த 2108 ஆம் ஆண்டே நான் அரசியலை விட்டு விலக நினைத்தேன். ஆனால் அப்பா ( தேவகவுடா )வின் வற்புறுத்ததால் மீண்டும் அரசியலுக்கு வந்தேன்.
மேலும், நான் முதல்வரானதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி.கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவைக்கு வெளியே வளாகத்தில் பாஜக =- காங்கிரஸ் தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.