Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்.. காங்கிரஸ் மாணவர் பிரிவு தலைவர் கைது..!

Advertiesment
ஒடிசா

Siva

, திங்கள், 21 ஜூலை 2025 (10:56 IST)
ஒடிசா மாநிலத்தில் ஒரு கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒடிசாவை சேர்ந்த அந்தக் கல்லூரி மாணவி, தனது நண்பர்களுடன் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு மற்றவர்கள் மது அருந்திய நிலையில், அவர் குளிர்பானம் மட்டுமே குடித்துள்ளார். ஆனால், அந்த குளிர்பானத்தில் போதைப்பொருள் கலக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதைக் குடித்த சிறிது நேரத்திலேயே அவருக்கு மயக்கம் வந்துள்ளது. உடனே தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
 
அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு தலைவரான உதித் பிரதான் அவரை அழைத்து சென்றதாகவும், மயக்கம் அடைந்த நிலையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்ததை பின்னர் உணர்ந்ததாகவும் மாணவி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
 
இந்த புகாரை தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதே இரவே போலீசார் உதித் பிரதானை கைது செய்தனர். காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் பிரதானின் குடும்பத்தினர் காவல் நிலையத்தின் முன் கூடி, காவல் நிலைய அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் விலை இன்று மீண்டும் விலை உயர்வு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?