Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனி ஞாயிறு மட்டும் தான்: நவம்பர் மாதம் வங்கி விடுமுறை இல்லை!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (13:25 IST)
நவம்பர் மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் 2வது, 4வது சனிக்கிழமை ஆகிய நாட்கள் மட்டுமே வங்கி விடுமுறை என்றும் மற்ற நாட்கள் வங்கி விடுமுறை இல்லை என்றும் தெரியவந்துள்ளது. 
 
அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, மிலாடி நபி ,தீபாவளி உள்ளிட்ட பல விடுமுறை நாட்கள் வந்தன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் 4 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என இந்த ஆறு தினங்கள் தவிர மற்ற நாட்கள் அனைத்திலும் வங்கி செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது 
 
இருப்பின்ம் நவம்பர் 1ஆம் தேதி கன்னட ராஜ்யோத்சவா தினம் என்பதால் பெங்களூரு மற்றும் இம்பால் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் நவம்பர் 8ஆம் தேதி குருநானக் ஜெயந்தி என்பதால் ஐஸ்வால், பேலாப்பூர், போபால், புவனேஷ்வர், சண்டிகர், டேராடூன் மற்றும் ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments