நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் இருந்து ரூ.85,000 கோடி வரை கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் 57 பேர் மோசடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த நபர்களின் பட்டியலை வெளியிட வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அதைத்தொடர்ந்து விசாரணையில் ரூ.500 கோடிக்கு அதிகமாக கடன் வாங்கி திரும்ப செலுத்தாத நபர்களின் விவரத்தை அறிவிக்கும்படி உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
அதன்படி ரூ.85,000 கோடி வரை கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் இருப்பவர்கள் மொத்தம் 57 பேர் என்று ரிசர்வ் வங்கி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றம் ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்துள்ளது.