Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாதம் கூட ஆகல.. தூங்கிய புது கணவனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மனைவி! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

Prasanth K
வியாழன், 12 ஜூன் 2025 (10:41 IST)

மேகாலயா ஹனிமூன் வழக்கின் அதிர்ச்சியே குறையாத நிலையில் மகாராஷ்டிராவில் திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் புது கணவனை, மனைவி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தை சேர்ந்தவர் அனில் லோகாண்டே. 50 வயதாகும் அனில் லோகாண்டே மனைவி காலமான நிலையில் தனிமையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அனில் அதே பகுதியை சேர்ந்த ராதிகா என்ற 29 வயது பெண்ணை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

 

ஆனால் திருமணம் ஆனதிலிருந்தே இருவருக்கும் இடையே வாக்குவாதம், சண்டை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு அனில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்த ராதிகா, அதை வைத்து அனிலின் தலையை பிளந்து கொடூரமாக கொன்றுள்ளார்.

 

கொலை செய்த பிறகு தனது சகோதரனுக்கு போன் செய்து கூறியுள்ளார். அதை தொடர்ந்து இந்த சம்பவம் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து ராதிகாவை கைது செய்ததுடன், அனில் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மத்திய பிரதேசத்தில் திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் சோனம் என்ற பெண் தனது கணவன் ராஜா ரகுவன்ஷியை ஆளை வைத்துக் கொலை செய்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தடுத்து புதுமண தம்பதிகள் தங்கள் இணையராலேயே கொல்லப்படும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments