Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘தூய்மை இந்தியா’ அல்ல, நாறும் இந்தியா! - ரவிக்குமார் எம்.பி டூவிட்

‘தூய்மை இந்தியா’ அல்ல, நாறும் இந்தியா!  - ரவிக்குமார் எம்.பி   டூவிட்
, புதன், 3 பிப்ரவரி 2021 (18:00 IST)
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் இரண்டாம்முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

பிரதமர் மோடி தான் முதன்முறையாகப் பதவியேற்றபோது, இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார்.

இந்தத்திட்டத்திற்கு அப்போது நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவளித்தனர். இது அனைத்து மாநிலங்களிலும் பரவலாக்கப்பட்டது.

இத்திட்டம் இப்போதும் நடைமுறையில் உள்ளது, திமுக எம்.பி ரவிக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து நாறும் இந்தியா என்று விமர்சித்துள்ளார்.

அதில், நாறும் இந்தியா சாக்கடை சுத்தம் செய்வதில் ஈடுபட்ட தொழிலாளிகள் 340 பேர் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் உயிரிழப்பு. தமிழ்நாட்டில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு 2 ஆவது இடம்! ‘தூய்மை இந்தியா’ அல்ல, நாறும் இந்தியா! எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இன்று அறிஞர் அண்ணாவில் நினைவு தினம் என்பதால். இதுகுறித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில், பேரறிஞர் அண்ணா நினைவு நாள்: மாநில சுயாட்சியெனும் உரிமை முழக்கம்

1960 களில் இருந்ததைப்போலவே மாநில உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்படும் நேரமிது. இந்நிலையில் மத்திய மாநில உறவுகளை சீராய்வுசெய்ய ஆணையம் ஒன்று  அமைக்கப்படவேண்டும். துரை.ரவிக்குமார் எம்.பி எனப் பதிவிட்டுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவலிங்கம் கண் திறந்ததாகத் தகவல் ..குவிந்த பக்தர்கள்