Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்பி.. மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா?

Siva
புதன், 5 ஜூன் 2024 (08:10 IST)
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று வெற்றி குறித்த அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் வடமேற்கு மும்பை தொகுதியில் ஒரு வேட்பாளர் வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து இந்த தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை நடத்தப்படுமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மும்பை வட மேற்கு தொகுதியில் போட்டியிட்ட சிவசேனா ஷிண்டே கட்சியின் வேட்பாளர் ரவீந்திரன் என்பவர் 452644  வாக்குகள் பெற்ற நிலையில் சிவசேனா கட்சியின் கட்சியின் உத்தவ் தேவ் கட்சியின் வேட்பாளர் அவரைவிட குறைவாக 48 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

இந்த தேர்தலில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் ரவீந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து மீண்டும் எண்ணிக்கை நடத்த சிவசேனா உத்தவ்தேவ் பிரிவினர்  தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தல் நடந்துள்ளதால் எத்தனை முறை எண்ணினாலும் அதே எண்ணிக்கை தான் வரும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments