Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி தேர்தல் கமிஷனுக்கு அதிமுக வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் புகார் மனு!

Advertiesment
Lok shabha election2024

J.Durai

மதுரை , செவ்வாய், 4 ஜூன் 2024 (14:29 IST)
மதுரை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிட வந்த அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ....
 
ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் மதுரையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 
 
காலையில் முதலில் தொடங்கிய தபால் ஓட்டுகள் எண்ணிக்கையின் போது, பல தபால் ஓட்டுகள் கவர் ஒட்டப்படாத நிலையில் பிரிந்து இருந்ததது. வாக்களித்தவரின் கையெழுத்துகள் அடித்தல் திருத்தலுடன் இருந்தது. பல Serial No. கள் திருத்தப்பட்டு இருந்தன.
 
இதனைச் சுட்டிக் காட்டிய போது, ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்வது போல், தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான  சங்கீதாவின் பேச்சு இருக்கிறது.
 
தொடர்ந்து பிற வாக்குகளின் எண்ணிக்கையிலும் தவறுகள் நடைபெறவும், முடிவுகள் மாற்றி அமைக்கவும் வாய்ப்பு இருப்பதனால்,
 
மதுரை பாராளுமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, இந்திய தேர்தல் கமிஷனுக்கு புகார் மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
 
அதேபோல் மற்றொரு சுயேச்சை வேட்பாளரும் மாவட்ட தேர்தல் அதிகாரி சங்கீதா ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் முதல் முறையாக 10 சதவீத வாக்கை பெற்றது பாஜக.. 2026 தேர்தலுக்கு உதவுமா?