இல்ல.. எங்களுக்கு புரியல! இதுதான் தூய்மை இந்தியாவா? - கிண்டலுக்கு உள்ளான ரயில்வே பதிவு!

Prasanth K
வியாழன், 25 செப்டம்பர் 2025 (14:07 IST)

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் சுத்தம் செய்யப்பட்டதாக மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள பதிவு கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

 

மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களில் ‘ஸ்வச் பாரத்’ என்ற தூய்மை இந்தியா திட்டமும் ஒன்று. சமீபத்தில் தூய்மை இந்தியாவை முன்னெடுக்கும் வகையில் Swachhata hi seva 2025 என்ற திட்டம் தொடங்கப்பட்டது. காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 வரை முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தில் பல பகுதிகளையும் சுத்தம் செய்து புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில் மத்திய ரயில்வே கோஹ்லாபூர் ரயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொண்டிருப்பதாக ஒரு பதிவிட்டுள்ளது. அதில் சுத்தம் செய்யும் முன்பும், சுத்தம் செய்த பிறகும் எடுத்த போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இரண்டுமே எந்த மாற்றமும் இன்றி ஒன்றாக உள்ளன. ஒரு படத்தில் உள்ள பிளாஸ்டிக் பாட்டிலும், சில பேப்பர்களும் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன.

 

இந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்து வரும் பலரும் படத்தில் உள்ள 6 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள் போட்டி போல இது உள்ளதாக கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஜீரோ.. பிகாரில் என்டிஏ ஜெயிக்க அவர்தான் காரணமா

தீபாவளிக்கே வெடிக்க வேண்டிய வெடிகுண்டு.. கைதான நபர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்..!

போலீசாருக்கு ரூ.50 லட்சம் கொடுத்தாரா நடிகர் ஸ்ரீகாந்த்? அமலாக்கத்துறை விசாரணை..!

தமிழகத்தில் 342 வெடிகுண்டு மிரட்டல்கள்.. குற்றவாளிகள் சென்னையை சேர்ந்தவர்கள்: காவல் துறை ஆணையர்

தேர்தல் முடிந்த சில மணி நேரத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments