Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசியலில் ஈடுபட போகிறேனா? சோனுசூட் விளக்கம்

அரசியலில் ஈடுபட போகிறேனா? சோனுசூட் விளக்கம்
, திங்கள், 15 நவம்பர் 2021 (09:39 IST)
நடிகர் சோனு சூட் அரசியல் கட்சி ஒன்றின் சேரப் போவதாகவும் விரைவில் நடைபெறவிருக்கும் பஞ்சாப் மாநில தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார் 
 
கொரோனா காலத்தில் ஹீரோவாக புகழப்பட்டவர் நடிகர் சோனு சூட் என்பது தெரிந்ததே. அவர் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார் என்பதும் பல மாணவ மாணவிகளுக்கு உதவி செய்தார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் விரைவில் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்து சோனு சூட் போட்டியிடுவார் என்றும் அவருடைய தங்கையும் அரசியலில் குதிக்க போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் 
 
பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நான் அரசியல் கட்சியில் சேரப் போவதாக வெளியான தகவல் தவறானது என்றும் தனது சகோதரி மட்டுமே அரசியலில் இறங்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார், சகோதரியின் அரசியல் பிரவேசத்திற்கு அவர் ஆதரவளிப்பார் என்றும் அவர் நேரடி அரசியலில் இறங்கப் போவதில்லை என்றும் இதன் மூலம் தெரிய வருகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொறியியல் தேர்வு குறித்து அண்ணா பல்கலையின் முக்கிய அறிவிப்பு!