பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சற்றுமுன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் பொறியியல் கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது பொறியியல் கல்லூரியில் மீண்டும் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடைபெற்றது என்ற நிலையில் தற்போது பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முறையில் மாற்றம் இல்லை என்றும் நேரடி எழுத்துத்தேர்வு நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டும் ஆன்லைன் மூலமே தேர்வு நடைபெறும் என செய்திகள் கசிந்து வந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அந்த செய்தியை மறுத்து எழுத்துத் தேர்வு நடைபெறும் என திட்டவட்டமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது