பெங்களூரில் சிக்கன் பிரியாணியில் பீஸ் இல்லை எனக் கூறி உணவகத்தின் மீது வழக்கு தொடர்ந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் அசைவ ஓட்டல் இருக்குமானால் அங்கு செல்லும் வாடிக்கையாளர்கள் பிரியாணி இருக்குமா என்று கேட்பதுதான் முதல் கேள்வி. அந்தளவுக்கு அதன் ருசியும் மணமும் பிடித்தமானது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு ஓட்டலுக்கு சாப்பிட்ட சென்ற கிருஷ்ணப்பா என்ற நபர் பிரியாணியில் பீஸ் இல்லை என்பதாகவும், இது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி நுகர்வோர் தீர்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து, பிரியாணியின் விலையான ரூ.150 உடன் சேர்த்து ரூ1150 ஐ இழப்பீடாக வழங்க சம்பந்தப்பட்ட கடைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.