Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த இந்தியா!

உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த இந்தியா!
, ஞாயிறு, 12 நவம்பர் 2023 (18:08 IST)
இந்தியாவில்  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரில்  இன்றைய போட்டியில்  இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில், ரோஹித் சர்மா 61 ரன்னும், கில் 51 ரன்னும், விராட் கோலி 51 ரன்னும் அடித்தனர், ஸ்ரேயாஷ் அய்யர் 94 பந்துகளுக்கு 128 ரன்கள் அடித்து அசத்தினர். கே.எல்.ராகுல் 64 பந்துகளில் 102 ரன்கள் அடித்தார்.

எனவே 50 ஓவர்களில்  4விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் எடுத்தனர்.

இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் முதன் முறையாக முதல் 5 பேட்டர்கள் அரைசதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இது 3 வது நிகழ்வு ஆகும், இதற்கு முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும், கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.எல்.ராகுல், ஸ்ரேயாஷ் அய்யர் அதிரடி ஆட்டம்! நெதர்லாந்துக்கு இமாலய இலக்கு!