Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதானியின் எ.பி.ஓ விலகலால் எந்தப் பாதிப்புமில்லை- நிர்மலா சீதாராமான்

Advertiesment
இனி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்பதே இருக்காது
, ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (10:03 IST)
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அதானி. இவர் குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க்  நிறுவனம் இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து, ஒரு அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குகள்  கடந்த 6 நாட்களில் ரூ.8.5 லட்சம் கோடி இழந்துள்ளது.

இது  நாட்டின் பெரும் பேசுபொருளாக உள்ள நிலையில், அதானி குழுமம் ரூ.20 அஅயிரம் கோடி நிதி திரட்ட தனது கூடுதல் பங்குகளை( எப் பி ஓ) பொதுவெளியில் விற்பனைக்குக் கொண்டு வந்தது.

இதை வாங்க வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தன, இருப்பினும் இதைத் திரும்பப் பெறுவதாக அதானி தெரிவித்தார்.

இதுகுறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இதற்கு முன் பங்குச் சந்தையில் எந்த எப்.பி. ஓவும் திரும்பப் பெறப்பட்டதில்லையா? அதானியின் எப்.பி.ஓ திரும்ப பெறப்பட்டதால், இந்திய பொருளாதாரம், அதன் மதிப்பிற்குப் பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது: முன்னாள் முதல்வர்