எனக்கு யூடியூபில் மாதம் 3 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி..!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:48 IST)
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனக்கு யூட்யூபில் மாதம் 3 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல என்றும் எனக்கு யூடியூப் மூலமாக மாதம் ரூ.3 லட்சம் வருமானம் வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள மக்கள் யூடியூப்-இல் நான் பேசுவதை கவனிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் யூடியூபில் அவருக்கு  ஆயிரக்கணக்கான சப்ஸ்கிரைப்ர்கள் உள்ளனர் என்றும் அவர் சுமார் 2500 வீடியோக்களை பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பாராளுமன்றத்தில் அவர் பேசும் காட்சிகள் மற்றும் அரசியல் விழா, பொது மேடைகளில் பேசுவதை அவர் வீடியோவாக எடுத்து தனது யூடியூப் இல் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஒவ்வொரு வீடியோவுக்கும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments