வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை: தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:42 IST)
தேர்தலின் போது பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என  கவுன்சிலர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி என்ற மாவட்டத்தில் உள்ள நகராட்சி கவுன்சிலர் முலபர்த்தி ராமராஜ். இவர் தேர்தலில் போட்டியிடும்போது வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். 
 
ஆனால் தன்னால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறி பொதுமக்கள் முன்னிலையில் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டார் தான் பதவி ஏற்று 31 மாதங்கள் ஆகிவிட்டன என்றும் ஆனால் தனது வார்டில் உள்ள சாலைகள் மின்விளக்கு குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளை என்னால் தீர்க்க முடியவில்லை என்றும் அவர் ஏற்கனவே நகராட்சி கூட்டத்தில் தனது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திடீரென அவர் தனது வார்டுக்கு வந்து பொதுமக்கள் முன்னிலையில் தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments