Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

7வது முறையாக முதல்வராகிறார் நிதிஷ்குமார்: கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து!

Advertiesment
7வது முறையாக முதல்வராகிறார் நிதிஷ்குமார்: கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து!
, திங்கள், 16 நவம்பர் 2020 (07:49 IST)
பீகார் மாநிலத்தில் இன்று 7வது முறையாக நிதிஷ்குமார் முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 243 உறுப்பினர்களை கொண்ட இம்மாநிலத்தில் 125 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது. பாஜக 74 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றதை அடுத்து சமீபத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கூடி நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்தனர்
 
இதனை அடுத்து 7வது முறையாக முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்கிறார் அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக நான்காவது முறையாக முதல்வர் பதவியை ஏற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நவம்பர் 29ம் தேதியுடன் பீகாரில் சட்டமன்ற சட்டசபை முடிவடைய உள்ள நிலையில் நிதிஷ்குமார் முதல்வர் பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக கொரோனா: அமெரிக்காவில் அதிகரிப்பு, இந்தியாவில் குறைவு