Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் ஏன் ? – நிதின் கட்கரி கூறிய சொண்ட அனுபவம் !

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (08:59 IST)
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர்க்கு அதிக அபராதம் விதிக்கப்படுவதாக எழுந்துள்ள குரல்களுக்கு விளக்கமளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய மோட்டார் வாகன சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விதி மீறலில் ஈடுபடுவோர்க்கு முன்னர் இருந்த அபராதத் தொகையை விட 10 மடங்கு அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. உதாரணமாக லாரி ஓட்டுனர் ஒருவருக்கு 86,000 ரூபாய் அபராதமும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் லுங்கி அணிந்து ஓட்டியதற்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதும் பரவலாக கண்டனங்களை எழுப்பியுள்ளன.

இந்த கடுமையானப் போக்குகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நடந்த மோடியின் 100 நாட்கள் ஆட்சி சாதனைகள் குறித்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது ‘மும்பையில் அதிக வேகத்தில் சென்றதாக என் பெயரிலுள்ள காருக்கு அதிகமான அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறினால் மத்திய அமைச்சர்களாக இருந்தாலும் அபராதம் கட்ட வேண்டும். அதிக அபராதத்தால் ஊழல் அதிகரிக்கும் என்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க கூல்ட்ரிங்க்ஸ், உணவுகளுக்கு தடை! தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

8 மாவட்டங்களில் காத்திருக்குது மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

505 வாக்குறுதிகளில் 66 மட்டும்தான் நிறைவேற்றம்.. வெள்ளை அறிக்கை குடுங்க! - அன்புமணி ராமதாஸ்!

1 சவரன் 31 ஆயிரம்தான்..! அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்! - வாங்கலாமா? என்ன ரிஸ்க்?

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments