பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலக இருப்பதாகவும் மீண்டும் அவர் பாஜக ஆதரவுடன் முதலமைச்சர் பதவியை ஏற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் ஏற்கனவே தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலக இருப்பதாகவும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
பீகாரில் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகவும் இன்றே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் நிதிஷ்குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணியை முறித்து கொண்டு பாஜகவுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே ரீதியில் சென்றால் இந்தியா கூட்டணி துண்டு துண்டாக சிதறி பாஜகவின் வெற்றியை எளிதாகும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்