இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்க பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மறுத்துவிட்டதாகவும் இதனை அடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கூட்டணியின் முக்கிய கூட்டம் இன்று கால்நடை மூலம் நடந்தது என்பதும் இதில் மு க ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று கூறப்பட நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு அந்த பதவியை கொடுக்க அனைவரும் முன்வந்தனர். ஆனால் இந்த பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து மல்லிகார்ஜுன கார்கே ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் தேர்விலேயே இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஒருமித்த கருத்தை எடுக்க முடியாத நிலையில் மற்ற முக்கிய முடிவுகளை எப்படி எடுப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்