Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் இழப்பு ஏற்படும்: நிர்மலா சீதாராமன் கணவர் கணிப்பு..!

Mahendran
புதன், 27 மார்ச் 2024 (18:57 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் இழப்பு ஏற்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவராக இருந்தாலும் பிரபாகரன் என்பவர் பாஜகவுக்கு எதிராகவே கடந்த சில ஆண்டுகளாக பேசி வருகிறார் என்பது குறிப்பாக இவர் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து எழுதிய கட்டுரைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் தேர்தல் பத்திர விவகாரம் பாஜகவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் அதிகமாக சென்றடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்றும் உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என்றும் மக்கள் தற்போது தேர்தல் பத்திர விவகாரத்தை புரிந்து கொண்டுள்ளனர் என்பதும் இதனால் வாக்காளர்களால் பாஜக அரசு கடுமையாக தண்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரே பாஜக குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments