தனது தூக்கு தண்டனைக்கு எதிராக கருணை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை இரண்டு முறை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மார்ச் 3 ஆம் தேதி நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதனிடையே நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, குற்றம் புரிந்தபோது தனக்கு 16 வயது எனவும், அதனால் தன்னை சிறார் தண்டனை சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் பவன் குப்தா சார்பில் ஜனாதிபாதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியின் மனு நிராகரிப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வருகிற மார்ச் 20 ஆம் தேதி, தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது தூக்கு தண்டனைக்கு எதிராக கருணை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.