Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை : பாஜக படு தோல்வி

Webdunia
வியாழன், 31 மே 2018 (14:35 IST)
உத்தரப்பிரதேசம் கைரணா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
4 மக்களவை தொகுதி மற்றும் 10 சட்டமன்றபேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கம் முதலே அனைத்து தொகுதிகளிலும், பாஜக அல்லாத மற்ற கட்சியினர் முன்னிலை வகித்து வந்தனர்.
 
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் கைராணா தொகுதியில் பாஜக வேட்பாளர் மிரிகங்கா சிங் தோல்வி அடைந்தாந். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பிஎஸ்பி, ஆதரவு பெற்ற ராஷ்டிரிய லோக் தள் வேட்பாளர் தபசம் ஹசன் வெற்றி பெற்றுள்ளார்.
 
இந்துப் பெரும்பான்மை தொகுதியான கைரணாவில் ஒரு இஸ்லாமியர் வெற்றி பெற்றுள்ளதும், உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில் இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அதேபோல், நூர்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளரும், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதள வேட்பாளரும், கர்நாடகா மாநிலம் ராஜேஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், மேகாலயாவில் காங்கிரஸ் வேட்பாளரும், கேரளா மாநிலம் செங்கனூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் பாஜகவிற்கு பலத்த அடி ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments