கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஒமிக்ரான் தொற்றைக் குறைக்க இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிககவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த வரும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் இருந்து கோவா மாவிலத்திற்கு வந்த 8 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவாவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளளதாக அம்மா நில அரசு தெரிவித்துள்ளது.