நேற்று உலகம் முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2022ம் ஆண்டு முடிந்து நேற்று உலகமே 2023ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த நிலையில் உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின. கொரோனாவிற்கு பிறகு நீண்ட காலம் கழித்து பல நாடுகளிலும் கட்டுப்பாடுகள் இன்றி கொண்டாடப்படும் புத்தாண்டு என்பதால் பல பகுதிகள் திருவிழா கோலம் பூண்டது.
மக்கள் பலரும் புத்தாண்டை கொண்டாட உணவுகளை ஆன்லைன் உணவு டெலிவரி ஆப்களில் ஆர்டர் செய்துள்ளனர். இந்தியாவிலும் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவில் மட்டும் 3.50 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
பவர்ச்சி ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்காக 15 டன் பிரியாணியை தயார் செய்ததாகவும், டோமினாஸ் பீட்சா நிறுவனம் 61 ஆயிரம் பீட்சாக்களை இந்தியா முழுவதும் டெலிவரி செய்ததாகவும் கூறியுள்ளது. உணவு பொருட்கள் தவிர்த்து வேறு ஒரு பொருளும் அதிகம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஸ்விகி இன்மார்ட் மூலமாக புத்தாண்டு இரவில் மட்டும் 2,757 ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.