வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசிய மற்றும் மாநில கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சில கட்சிகள் கூட்டணிக்காகவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் சில கட்சி தொண்டர்கள் தம் வித்தியாசமான அணுகுமுறைகளை கையாளுகின்றனர். அப்படி ஒரு வித்தியாசமான நிகழ்வு நடந்துள்ளது.
சில திருமண அழைப்பிதழ்களில் மொய், பரிசு பொருட்கள் வேண்டாம். அல்லது தவிர்க்கவும் என்ற வாக்கியம் தான் வழக்கமாக இடம் பெற்றிருக்கும். ஆனால் பீஹார் மாநிலத்தில்இரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.
பிஹார் மாநிலத்திலுள்ள சிவான் என்ற பகுதியில் வசிக்கும் அசோக் சிங் வசித்து வருகிறார். இஅவ்ர் பாஜகவை சேர்தவராவார்.இவர் தன் மகளின் திருமணத்திற்காக அழைப்பிதல் அச்சடித்து உற்வினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதில் இடம் பெற்றுள்ளதாவது: ’’திருமணத்திற்கு வருபவர்கள் பரிசுகள் தவிர்க்கவும்: அதற்குப் பதிலாக லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாக்களிப்பேன் என்று உறுதி அளிக்க வேண்டும் அதுவே மணமக்களுக்கான சிறந்த பரிசாக இருக்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.’’