Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாத வாடகையை மட்டுமே இனி முன்பணமாக வாங்க வேண்டும்.. மத்திய அரசின் புதிய சட்ட திட்டம்

Arun Prasath
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (18:04 IST)
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய மாதிரி வாடகை வீட்டு வசதி வரைவு சட்டத்தில், இரண்டு மாத வாடகையை மட்டுமே முன்பணமாக வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், வாடகை வீட்டிற்கு இனி இரண்டு மாத வாடகையை மட்டுமே முன்பணமாக பெற வேண்டும் என்று, மத்திய அரசு, மாதிரி வீட்டு வசதி சட்ட வரைவை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. மேலும் அந்த வரைவு சட்டத்தில், வாடகையை உயர்த்த வேண்டும் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே போல், ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் வாடகைத்தாரர் வீட்டை காலி செய்ய மறுத்தால், அபராதம் விதிக்கவும், ஒவ்வொறு மாதத்திற்கும் இரு மடங்கு வாடகையை உரிமையாளர்கள் வசூலிக்கவும் அந்த சட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு வாடகைத் தாரர்களின் உரிமைகளுக்கு இணையாக நில உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த சட்ட திட்டம் உருவாக்கியிருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments