Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”பரீட்சையில் தயவு செய்து உங்கள் சொந்த கதைகளை எழுதி வைக்காதீர்கள்”.. மாணவர்களுக்கு அட்வைஸ் கூறும் பல்கலைகழகம்

”பரீட்சையில் தயவு செய்து உங்கள் சொந்த கதைகளை எழுதி வைக்காதீர்கள்”.. மாணவர்களுக்கு அட்வைஸ் கூறும் பல்கலைகழகம்

Arun Prasath

, வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (14:10 IST)
தேர்வில் பதில் தெரியவில்லை என்றால், உங்கள் சொந்த கதையை எழுதிவைக்காதீர்கள் என ஒரு பல்கலைகழகம் மாணவர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளது.

பொதுவாக தேர்வு எழுதுகையில் மாணவர்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் நரிக் கதை, காக்கா கதை, பாட்டி வடை சுட்ட கதை அல்லது குமுதம், குங்குமம் ஆகிய பத்திரிக்கைகளில் வரும் திரில்லர் கதைகளை கூட எழுதிவைப்பார்கள். இதில் சிலர் தமிழ் சினிமா பாடல்கள், ஆங்கில ஆல்பம் பாடல்களை கூட பதில்களாக எழுதிவைப்பார்கள்.

அப்படி இல்லை என்றால், ஜன்னல் வழியே தெரியும் இயற்கை காட்சிகளை ரசித்து கொண்ட்டிருப்பார்கள், அல்லது தேர்வு எழுதும் சக மாணவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களின் விடைத் தாள்களை திருத்தம் செய்யும் பேராசியர்களின் நிலையை கண்டால் கொஞ்சம் வேதனையாகத் தான் இருக்கும்.

இந்நிலையில் குஜராத்தில் உள்ள பண்டித் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தனது மாணவர்களுக்கு வினா தாளில் பத்து அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்த அறிவுரைகள் என்னவென்றால்,
webdunia

1.நீங்கள் இங்கே இஞ்சினியர் ஆகவேண்டும் என வந்திருக்கிறீர்கள், கதாசிரியர் ஆவதற்கு அல்ல. ஆதலால் தயவு செய்து கதையடித்து வைக்கதீர்கள்.

2.நீங்கள் என் வகுப்புகளுக்கு வரவில்லை என்றாலோ, மேலும் தேர்வுக்கு தயாராக வரவில்லை என்றாலோ, அந்த கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.

3.உங்கள் அருகில் இருப்பவர்களை பார்த்து சிரிக்காதீர்கள். அவர்களுக்கும் வினாக்களுக்கு பதில் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தேர்வு அறை என்பது பேசுவதற்கான அறை இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

4.நீங்கள் அளிக்கும் பதில்களில் உதாரணங்களோ அல்லது அது குறித்த வரைப்படங்களோ இல்லை என்றால், அது இண்டெர்நெட் இல்லாத ஸ்மார்ட்ஃபோனுக்கு சமம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

5.தேர்வுகள் என்பது உங்கள் முன்னாள் காதலியை போல, எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க நாம் முயற்சி எடுத்து தான் ஆகவேண்டும்.

6.உங்கள் வாழ்க்கையில் பல ஆப்ஷன்கள் இருக்கலாம், ஆனால் இந்த தேர்வில் அப்படியல்ல, நீங்க எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கவேண்டும்.

7.அறிவாளியான ஜான் ஸ்னோவை விட உங்களுக்கு அதிகமாக தெரியும் என நினைக்கிறேன், வாழ்த்துகள்.

இவ்வாறு அந்த வினாத்தாளில் அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆசிரியரின் இந்த அறிவுரைகள் விநோதமான ஒன்றாக பார்க்கப்பட்டாலும், இதில் ஒரு கேலியான தொனி இருப்பதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயற்கையை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்! – நியூஸிலாந்தில் பேரணி