Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்திரயான் போனா என்ன? நாம சந்திரனுக்கே போகலாம்!: இஸ்ரோ சிவன் அதிரடி!

Advertiesment
சந்திரயான் போனா என்ன? நாம சந்திரனுக்கே போகலாம்!: இஸ்ரோ சிவன் அதிரடி!
, வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:50 IST)
நிலவுக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட சந்திரயான் திட்டத்தில் லேண்டர் செயலிழந்ததால் துயரத்தில் உள்ள மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் இஸ்ரோ சிவன்.

நிலவின் தென் துருவ பகுதிகளை ஆராய்வதற்காக சந்திரயான் 2 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியது. வெற்றிகரமாக நிலவுக்கு சென்ற சந்திரயான் விண்கலம் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியபோது சிக்னலை இழந்தது. அமெரிக்க விண்வெளி மையமான நாசா, இஸ்ரோவுடன் இணைந்து விக்ரம் லேண்ட்ரை கண்டுபிடிக்க முயன்றது. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

இந்நிலையில் குஜராத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவன் “ விக்ரம் லேண்டர் சிக்னலை இழந்தது குறித்து ஆராய குழு அமைத்துள்ளோம். அவர்களது ஆய்வு முடிவுகளை வைத்து விக்ரம் லேண்டரில் என்ன குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். ஆய்வு குழுவின் அறிக்கைக்கு பிறகு நிலவின் அடுத்த பயணம் குறித்து பணிகள் தொடங்கப்பட்டும். 2022ல் விண்வெளிக்கு இந்திய வீரர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்தில் தீவிரமாக இயங்கி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக ஆதரவளிக்கும் கட்சிதான் வெற்றிபெறும் – பொன்னார் குழப்பமான பதில் !