வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு - புதிய உச்சத்தை தொட்டது

வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (07:48 IST)
அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை இன்று புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் இந்த விலையேற்றம் இருப்பதாக கூறப்பட்டாலும், விலை மதிப்பு உயர்ந்தால் மீண்டும் இந்த அளவுக்கு பெட்ரோல் ,டீசல் விலை இறங்காது என்பதே அனைவரின் கவலையாக உள்ளது.
 
நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.62 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.61 காசுகளாகவும் விற்கப்பட்டது.
 
இந்நிலையில் இன்று  சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்து ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. 
 
பல இடங்களில் ஹோட்டல்களில் உணவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், கால் டேக்ஸிகளின் வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அதிமுகவில் இணைய தயார்: ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்: தங்கத்தமிழ்செல்வன்