பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் குறித்து அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் இந்த விலையேற்றம் இருப்பதாக கூறப்பட்டாலும், விலை மதிப்பு உயர்ந்தால் மீண்டும் இந்த அளவுக்கு பெட்ரோல் ,டீசல் விலை இறங்காது என்பதே அனைவரின் கவலையாக உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.62 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.61 காசுகளாகவும் இன்றைய விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன
இந்த விலையானது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 22 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் குறிப்பிட்ட காலங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாறும், கடந்த ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது, ஜூலை மாதத்தில் சரிவை கண்டது.
ஆகவே இதற்கெல்லாம் அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க முடியாமல் போனாலும், அதன் மீதான வரியைக் குறைக்காமல் இப்படி அவர் பொறுப்பற்று பேசியிருப்பது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.