Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய 100, 200 ரூபாய்கள் நோட்டு.. ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்துடன் அறிமுகம்..!

Siva
புதன், 12 மார்ச் 2025 (09:35 IST)
ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்துடன் புதிய 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சக்தி காந்ததாஸ் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, புதிய கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா என்பவர் பதவியேற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில், புதிய கவர்னர் கையெழுத்திட்ட 50 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்த நிலையில், ரெப்போ வட்டி விகிதமும் குறைக்கப்பட்டது.
 
இப்போது, புதிய கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா கையெழுத்துடன் புதிய 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
இந்த புதிய 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் நிலையில், இந்த புதிய 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுக்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்க பொதுமக்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments