Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Siva

, புதன், 1 ஜனவரி 2025 (10:14 IST)
இன்று அதாவது 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல், மூன்று வகையான வங்கி கணக்குகள் மூடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆன்லைன் மோசடியை தடுப்பதற்காக பல மாதங்களாக செயல்படாமல் இருக்கும் வங்கி கணக்குகளை மூட வேண்டும் என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி முடிவெடுத்தது. அந்த நடவடிக்கை இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பண பரிமாற்றம் நடக்காத, நீண்ட காலமாக பூஜியம் தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கி கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத அக்கவுண்டுகள் இந்த நடவடிக்கையில் அடங்கும்.

வங்கி கணக்குகள் செயல்படாமல் முடக்கப்பட்டால், அந்த கணக்குகளை வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளை மீண்டும் செயல்பட செய்ய வங்கி கிளையில் சென்று கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர், அந்த கணக்குகள் மீண்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மோசடியை தடுப்பதற்காக மேற்கண்ட வகை வங்கி கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தாண்டில் தங்கம் வாங்க போறீங்களா? இன்று மட்டும் 320 ரூபாய் உயர்வு..!