Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதெல்லாம் உங்களுக்கு மறக்க முடியாத நினைவுகளா? சசிதரூர் எம்பி பதிவுக்கு கண்டனம்..!

Advertiesment
சசிதரூர்

Siva

, ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (12:20 IST)
காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது சமூக வலைத்தளத்தில் வயநாடு பகுதிக்கு நிவாரண உதவி வழங்கும் வீடியோவை பதிவு செய்து ’மறக்க முடியாத நினைவுகள்’ என்று கூறி இருப்பதை அடுத்து வயநாடு சோகம் உங்களுக்கு மறக்க முடியாத நினைவா என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர் நேற்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவுக்கு ’வயநாட்டில் மறக்க முடியாத நாளின் சில நினைவுகள்’ என்று கேப்ஷனாக பதிவு செய்திருந்தார்.

இதனை அடுத்து நெட்டிசன்கள் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உயிர் இழப்புகள், சோகங்களை முடியாத நிலவுகள் என்று கூறுவதா? சோகத்தால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் ஒரு மறக்க முடியாத நாளை கொண்டாட சென்றாரா? என்று சசிதரூருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனை அடுத்து சசி தரூர் அதற்கு விளக்கம் அளித்த போது ’மறக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளத்தக்கது அல்லது நினைவில் கொள்ளக்கூடிய ஒன்று என்ற பொருளில் தான் கூறினேன்’ என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது பதிலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! அல்கொய்தா காரணமா.? போலீசார் விசாரணை..!!