Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா, துருக்கி மட்டுமல்ல.. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கொடுத்த இன்னொரு நாடு.. இந்தியா அதிர்ச்சி..!

Siva
வியாழன், 22 மே 2025 (09:15 IST)
பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி ஆகிய நாடுகள் ஆயுதங்கள் வழங்கிய நிலையில் தற்போது மூன்றாவதாக நெதர்லாந்தும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
சீனாவும் துருக்கியும் பாகிஸ்தானுக்கு நட்பு நாடுகள் என்பதால்ஆயுதங்கள் வழங்கியதில் ஆச்சரியமில்லை. ஆனால்  கூடுதல் ஆச்சரியமாக நெதர்லாந்து, சீனாவிற்கு பிறகு பாகிஸ்தானுக்கு இரண்டாவது பெரிய ஆயுத வழங்குநராக இருக்கிறது.
 
இந்நிலையில், நெதர்லாந்தின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா இருப்பதால், துருக்கி எதிர்கொண்ட நிலையையே நெதர்லாந்தும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.
 
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அந்த நாடுகளில் டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து அடங்கும். 6 நாட்கள் நீடிக்கும் இந்த பயணத்தில், அவர் முதலில் மே 19ஆம் தேதி நெதர்லாந்து சென்றடைந்தார்.
 
இது "ஆபரேஷன் சிந்தூர்"க்கு பிறகு ஜெய்சங்கரின் முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய ஆயுத வழங்குநரான நெதர்லாந்தில் இருந்து அவரின் பயணம் தொடங்கியிருப்பது ஒரு முக்கிய செய்தியாகும்.
 
நெதர்லாந்தின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்தித்த பிறகு, டாக்டர் எஸ். ஜெய்சங்கர் தனது "X" சமூக வலைதளத்தில் எழுதியுள்ளார்:
 
இன்று பிரதமர் டிக் ஸ்கொஃபை சந்தித்ததில் மகிழ்ச்சி. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்தேன். பயங்கரவாதத்திற்கு எதிராக நெதர்லாந்து எடுத்துள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு நன்றி தெரிவித்தேன்.”
 
“இந்தியா-நெதர்லாந்து கூட்டாண்மையை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் அவரது அர்ப்பணிப்புக்கு நன்றி. இந்தக் குறிக்கோள்களை அடைய, எங்கள் அணிகள் முழுமையாக உழைப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் நடவடிக்கை காரணமாக இனிமேல் பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து ஆயுதங்கள் வழங்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 ஆயிரத்திற்காக பண்ணை அடிமையான சிறுவன்! சடலமாக திரும்பிய சோகம்! - என்ன நடந்தது?

படிக்கட்டில் பயணம் செய்தால் ரூ.1000 அபராதம்! - தெற்கு ரயில்வே அதிரடி முடிவு!

அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கட்ட கூடாது: முதல் மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்.. தண்ணீர் பிரச்சனையால் அரசுக்கு எதிராக போராட்டம்.. 2 பேர் பலி..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments