Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை வழக்கில் ஜாமீனில் வந்து இரட்டைக் கொலை! கேரளாவை அலறவிட்ட செந்தாமரை!

Prasanth Karthick
புதன், 29 ஜனவரி 2025 (09:51 IST)

கேரளாவில் கொலை வழக்கில் சிறை சென்ற செந்தாமரை என்ற நபர் ஜாமீனில் வெளியே வந்து வழக்குத் தொடர்ந்த இருவரை கொலை செய்துவிட்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள நென்மாரா பகுதியை சேர்ந்தவர் செந்தாமரை. இவர் கடந்த 2019ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த சஜிதா என்ற பெண்ணை கொடூரமாக தாக்கிக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு நடந்து வரும் நிலையில் அவர் சிறையில் இருந்தார். சமீபத்தில்தான் அவர் ஜாமீன் கிடைத்து வெளியே வந்தார்.

 

இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்ததுமே சஜிதாவின் கணவர் மற்றும் மாமியாரை கொடூரமாக கொன்று விட்டு தலைமறைவானார். இந்த சம்பவம் கேரளாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் போலீஸார் தனிப்படை அமைத்து கொலைக்காரன் செந்தாமரையை தேடத் தொடங்கினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த போத்துண்டி மலையில் செந்தாமரை பதுங்கியுள்ளதாக போலீஸாருக்கு தெரிய வந்தது.

 

தக்க சமயம் பார்த்து காத்திருந்த போலீஸார் செந்தாமரை சாப்பிடுவதற்காக மலையிலிருந்து இறங்கி வந்தபோது சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். செந்தாமரை ஜாமீனில் வெளியே வந்தபோதே சஜிதாவின் கணவர் தங்கள் உயிருக்கு செந்தாமரையால் ஆபத்து உள்ளதாக போலீஸில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழக்காததால் செந்தாமரையால் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் யாரும் புனிதராக முடியாது.. நடிகை மம்தா குல்கர்னி துறவறம் குறித்து பாபா ராம்தேவ்..!

யமுனை நதியில் நச்சு கலக்கும் பாஜக.. அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சால் சிக்கல்..!

மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்? ஆன்லைனில் தகவல் தேடி தற்கொலை செய்த 12ஆம் வகுப்பு மாணவி..!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எப் 15: 100வது ராக்கெட்டில் சாதனை செய்த இஸ்ரோ..!

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஏற்பட்ட தீடீர் கூட்ட நெரிசல்: 15 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments