பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி சமீபத்தில் கும்பமேளாவில் புனித நீராடி அதன் பின் துறவறம் ஏற்றதாக அறிவித்துள்ளார். அவரது பெயரும் மாற்றப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ் ஒரே நாளில் யாரும் புனிதராக முடியாது என்றும் இதுவரை உலக இன்பங்களை எல்லாம் அனுபவித்துவிட்டு பின்னர் திடீரென ஒரே நாளில் துறவிகளாக மாறிவிடுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் மகா மண்டேஸ்வரர் என்ற பட்டமும் பெற்று விட்டார் என்றும் துறவி ஆவதற்கு பல ஆண்டுகள் ஆன்மீகம் குறித்து கற்றுக்கொண்டு அதன் பின்னர் தான் துறவி ஆக முடியும் என்றும் அவர் கூறினார். ஒரு மாபெரும் கொண்டாட்டமான கும்பமேளாவில் ஒரு சிலர் அநாகரிகமாக இது போன்ற நிகழ்வுகளை செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே நடிகை மம்தா குல்கர்னி மீது போதை பொருள் கடத்தல் உள்பட சில வழக்குகள் உள்ள நிலையில் அந்த வழக்குகளில் இருந்து அவர் தப்பிப்பதற்காக தான் துறவறம் போன்றதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் பாபா ராம்தேவ் அவரது துறவறம் குறித்து கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.