நீட் தேர்வு இதுவரை பேனா-பேப்பர் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. முறைகேடுகளை தடுக்க, ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு பேனா-பேப்பர் முறையில் தான் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை சற்றுமுன் அறிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற விதி கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. பேனா-பேப்பர் என்ற ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடைபெற்று வருகிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வுகளை நடத்தி வரும் நிலையில், கடந்தாண்டு நடந்த தேர்வில் முன்கூட்டியே வினாத்தாள் வெளியானது உள்பட சில சர்ச்சைகள் இருந்தன.
தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக வழக்குகள் பதியப்பட்டன. இதனை அடுத்து, கல்வி அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம், நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தின. ஆனல் ஒரே நாளில் ஒரே ஷிப்டில், வழக்கமான ஓஎம்ஆர் முறையில், விடையை பேனாவில் குறிக்கும் வகையில் தேர்வு நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்காலத்தில், ஆன்லைன் முறையில் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.