Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு!

Advertiesment
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு!
, புதன், 4 ஆகஸ்ட் 2021 (13:02 IST)
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ஆம் தேதி கடைசி தேதி என நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
இந்த ஆண்டு நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது
 
ஆனால் தற்போது ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனையடுத்து ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தகுதிச் சுற்றில் முதலிடம்: தங்கத்தை குறிவைக்கும் நீரஜ் சோப்ராவின் ஈட்டி