Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

Siva
ஞாயிறு, 4 மே 2025 (12:31 IST)
இன்று  நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற இருக்குஜ்  நிலையில், நேற்று நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா என்ற ஊர், நீட் தேர்வு பயிற்சிக்கு புகழ் பெற்றது என்பதால், இந்த ஊரில் உள்ள பயிற்சி மையத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்து மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர்.
 
இந்த நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், நீட் தேர்வு பயிற்சி மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நீட் தேர்வு பயம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், பரிசோதனை முடிவுக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
கோட்டாவில் பயிற்சி பெற்று வரும் நீட் தேர்வு பயிற்சி மாணவர்கள் இதுவரை ஒரே ஆண்டில் 14 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

கரண்ட் ஷாக் வைத்து மீன்பிடிக்க முயற்சி! மின்சாரத்தில் சிக்கி இளைஞர்கள் பலி!

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments