Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமீன் மனுவை எதிர்த்து மேல்முறையீடு... சிக்கலில் ஆர்யன் கான்?

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (14:06 IST)
உச்சநீதிமன்றத்தில் என்.சி.பி. அதிகாரிகள் ஆர்யன் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆலோசித்து வருவதாக தகவல். 

 
போதை பொருள் கடத்தல் வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு கோரப்பட்டு பல முறை ஒத்திவைக்கப்பட்டு ஒருவழியாக அவருக்கு கடந்த மாதம் ஜாமீன் கிடைத்தது.  
 
ஆம், போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் 28 நாட்களுக்கு பிறகு ஜாமினில் விடுதலை ஆகி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியே சென்றார். என்.சி.பி. சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் என்.சி.பி. அதிகாரிகள் ஆர்யான் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்ற ஜாமீன் உத்தரவை ஆய்வு செய்தபிறகு, சட்டப்பூர்வமான கருத்துகளை தற்போது எடுத்து வருவதாகவும் தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

முதல்வர் ஸ்டாலினுக்கு 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தம்.. எப்போது டிஸ்சார்ஜ்?

இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து: சிறப்பு ரயில்களின் முழு விவரங்கள்..!

பீகாரில் 35 லட்சம் வாக்காளர்களை காணவில்லை.. தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments