Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொத்துத் தகராறில் உடன் பிறந்த அக்காவை கொடூரமாக தாக்கும் தங்கை; பதற வைக்கும் வீடியோ காட்சி

Advertiesment
சொத்துத் தகராறில் உடன் பிறந்த அக்காவை கொடூரமாக தாக்கும் தங்கை; பதற வைக்கும் வீடியோ காட்சி
, திங்கள், 29 ஜனவரி 2018 (13:53 IST)
சொத்து தகராறின் காரணமாக, உடன் பிறந்த அக்கா என்றும் பாராமல், தங்கை அவரது அக்காவை கொடூரமாக தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன உலகத்தில், நாகரிகமும் தொழில் நுட்பமும் வளர்ந்து கொண்டே போகும் வேலையில், மக்களிடம் சுயநலமும் வளர்ந்து கொண்டே போகிறது. அதே வேலையில் பணத்திறகாகவும், சொத்துக்காகவும் சில மனித மிருகங்கள், கொலை போன்ற கொடூர செயல்களில் ஈடுபடுகின்றனர்.
 
இந்நிலையில் கொல்கத்தாவில் பெண் ஒருவர் தனது சொத்துக்களை மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மூத்த மகளுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். இதனால் அவரது இரண்டாவது மகள் ஆத்திரமடைந்து உடன் பிறந்த சகோதரி என்றும் பாராமல், அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். 
 
இதனையடுத்து தாக்குதல் காட்சியை வீடியோ எடுத்த பக்கத்து வீட்டார், அதனை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இருந்த போதிலும் போலீஸார் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பக்கத்து வீட்டார் அந்த வீடியோவை தற்பொழுது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சி பார்ப்பவரது நெஞ்சங்களை பதற வைக்கும் விதமாக உள்ளது.
 
அந்த பெண்ணை கொடூரமாக தாக்கிய அவரது தங்கையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி; சற்று முன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நித்தியானந்தாவை இன்றே கைது செய்யுங்கள்: கடும் கோபமடைந்த நீதிபதி!