Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி மலையில் இயற்கையாகவே தெரியும் ஏழுமலையான்! பக்தர்கள் பரவசம்

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (18:45 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் புகழ் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கோவிலுக்கு தினமும் லட்சக் கணக்கானோர் வந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர் 
 
இந்த நிலையில் திருப்பதி திருமலைக்குச் செல்லும் வழியில் உள்ள ஏழு மலைகளில் ஒரு மலையில் இயற்கையாகவே ஏழுமலையான் உருவம் தெரிவதை தற்போது பக்தர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இயற்கையான ஏழுமலையானுக்கு பக்தர்கள் பாலாபிஷேகம், தயிர் அபிஷேகம் ஆகியவை செய்து, பூஜையும் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
திருப்பதி செல்லும் மலைப்பாதையில் உள்ள 16 வது மலைமுகட்டில் இருக்கும் ஒரு பாறையில் ஏழுமலையானின் திருமுகத்தை போல ஒரு பாறையில் காட்சி தருகிறது. பக்தர்கள் இதை ஏழுமலையான் என்றே கருதி வழிபட்டு வருகின்றனர். இந்த இயற்கை ஏழுமலையானுக்கு பக்தர்கள் குங்குமம் இட்டு, 40 அடி நீல மாலைகளை வைத்துள்ளதால் இந்த இயற்கையான ஏழுமலையான் கீழே இருந்து பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments