Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரகார பையனால் சிக்கிய விக்ரம் லேண்டர்: டிவிட்டரை கலக்கும் ஹேஷ்டேக்ஸ்!!

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (10:27 IST)
விக்ரம் லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இதனை இணையவாசிகள் டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். 
 
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 
 
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை நெருங்கிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. ஆனால், நிலவில் இருந்து 400 மீட்டர் தொலைவில் இருந்த போது திடீரென விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த தீவிர முயற்சி செய்தனர். நாசாவும் இதற்கு உதவி செய்தது, இருப்பினும் விக்ரம் லேண்டர் என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. 
 
இந்நிலையில் சற்று முன் நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட பகுதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த பகுதியில் விக்ரம் லேண்டர் நொறுங்கி விழுந்த பொருட்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்றையும் நாசா வெளியிட்டுள்ளது. 
அதோடு, மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியம் என்ற இளைஞர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் இந்த விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 
 
விக்ரம் லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது டிரெண்டாகி வருகிறது. #VikramLander, #Chandrayaan2, #NASA ஆகிய ஹேஷ்டேக்குகளின் கீழ் விக்ரம் லேண்டர் குறித்த செய்திகள் பதிவிடப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments