Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரவு நேரத்தில் மின்னும் மகா கும்பமேளா பகுதி.. நாசா வெளியிட்ட புகைப்படம்..!

Advertiesment
இரவு நேரத்தில் மின்னும் மகா கும்பமேளா பகுதி.. நாசா வெளியிட்ட புகைப்படம்..!

Mahendran

, திங்கள், 27 ஜனவரி 2025 (14:39 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், இரவில் மின்னும் இந்த நகரை நாசா புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடி வருகின்றனர்.

இந்த நிலையில், விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து கும்பமேளா பகுதியை புகைப்படம் எடுத்து, நாசா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பதிவில், "2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த புகைப்படம் இரவில் விண்வெளி மையத்திலிருந்து எடுத்தது. உலக அளவில் மனிதர்கள் கூடும், இந்த விழாவை முன்னிட்டு இரவு நேரத்தில் அந்த நகரமே ஒளிர்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணா பல்கலை மாணவி மீதே பழி சுமத்தும் உணர்ச்சியற்ற எப்.ஐ.ஆர்.. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!