Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடும் வாகனத்தில் ... குலை நடுங்கச் செய்யும் திருட்டு ? அதிர்ச்சி வீடியோ

Advertiesment
ஓடும்  வாகனத்தில்  ... குலை நடுங்கச் செய்யும் திருட்டு ? அதிர்ச்சி வீடியோ
, வெள்ளி, 14 ஜூன் 2019 (20:39 IST)
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சொகுசு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் அருகே மாருதி ஆம்னி வேனை ஓட்டி வந்தவர்கள் அந்தக் காரை நெருங்குகிறார்கள்.நெருங்கியதும் ஆம்னியில் இருந்த ஒருவன் தலையை வெளியில் நீட்டி, காரில் இருப்பவர்களிடம் இருந்து திருட முயற்சிக்கிறான்.இதை இவர்களுக்குப் பின்னால் காரில் சென்றவர் வீடியோ எடுத்து வெளியிட அது தற்போது வைரலாகிவருகிறது.
நொய்டாவில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் செல்லும் போது, அருகில் சென்றுகொண்டிருந்த ஆம்னிவேனில் இருந்த ஒருவன் தலையை வெளியே நீட்டி,கையில் ஒரு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, வழிப்பறி செய்ய முயற்சிக்கிறான்.
 
 
இதைப் பின்னால் வந்த காரில் இருந்த ஒருவர் தன் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தற்போது அது வைரல் ஆகிவருகிறது.
 
ஆனால் சமூகவலைதளத்தில் டிரண்டிங்  ஆக வேண்டும் என்பதற்காக இதுபோல் எடுத்திருக்கலாம் என்றும் தற்போது தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடும் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்ததால் பரபரப்பு