சமூக ஊடகங்களின் வருகையால் இன்று சாதாரண மனிதர்கள் கூட பிரபலம் ஆகிவிடமுடியும். திறமை மட்டும் இருந்தால் போதும். பணம் எதுவும் தேவையில்லை.வாரிசு என்ற அடையாளமும் தேவையில்லை.
இந்நிலையில் தற்போது கேரளாவில் ஒருவர் போஸ்ட் செய்த ஃபுல்ஜார் சோடா என்னும் வீடியோ சேலஞ்ச் பலராலும் பின்பற்றப்படுகிறது.மட்டுமல்லாமல் இந்த முறை அது வைரலாகிவருகிறது.
இது எப்படி என்றால்..
ஒரு கண்ணாடி கிளாஸில் சோடவை நிரப்பி, அதில் 10 பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, எலுமிச்சை சாறு, உப்பு, ஆகியவற்றை பட்டுபோல் அரைத்து அதில் சப்ஜா விதைகளை சேர்க்க வேண்டும். பின் ஷாட் கிளாசில் அதை சேர்த்து தண்ணீரில் நிரப்பி அவற்றை சோடா நிரப்பிய கிளாஸில் போட வேண்டும்.
அது பின்னர் பொங்கிவரும்.. உடனே அதை ஒரே வாயில் இடைவெளியில்லாமல் குடிக்க வேண்டும். இதுதான் தற்போதைய ஃபுல்ஜார் சோடா சேலஞ் ஆகும்.
கேரளாவில் ஜார் என்றால் சோட்டா என்று பொருளாகும். இதன் ஸ்பெஷல் என்னவெனில் காரம் மற்றும் சோடா சேர்ந்து தலைக்கு ஏறுமாம் கிர்றுனு என்கிறார்கள் இதை செய்து பார்த்தவர்கள்.