Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மியான்மர்: சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்கள்! - 283 பேர் மீட்பு!

Advertiesment
Indian Hostages

Prasanth Karthick

, செவ்வாய், 11 மார்ச் 2025 (08:56 IST)

மியான்மரில் கடத்தி வைக்கப்பட்டு சைபர்க்ரைம் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்களில் 283 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

 

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக கூறி இந்தியாவில் உள்ள தொழில்நுட்பம் படித்த நபர்களை அழைத்துச் சென்று மியான்மர், தாய்லாந்து நாடுகளில் பிணை கைதிகளாக வைத்து அவர்களை சைபர் மோசடிகளில் ஈடுபடுத்தும் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இவ்வாறாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் மியான்மர் - தாய்லாந்து எல்லையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால் செண்டரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டு வந்த 283 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாய்லாந்தில் உள்ள மயோ செட் நகருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து இந்திய விமானப்படை விமானத்தின் மூலமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

 

தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஐடி வேலை என அழைத்தால் அது தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்ட பின்னர் செல்லுமாறு இளைஞர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஃப்தார் நோன்புக்கு வந்தவர்களை தவெகவினர் அடித்து விரட்டினர்!? - விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு பரபரப்பு புகார்!