தாய்லாந்து மற்றும் மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்ட சுமார் 7,000 பேர் அவர்களின் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு என்ற காரணத்தால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆன்லைன் மோசடி செயல்களில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த நிலையில், தாய்லாந்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் 7,000 பேரை அவரவர் சொந்த நாட்டுக்கு நாடு கடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அனைத்து ஆன்லைன் மோசடி மையங்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து கொண்டே காதலிப்பது போல ஏமாற்றி பணம் பறிப்பது, சட்டவிரோத சூதாட்டங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் மோசடிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் பல பிரபலங்களும் சிக்கி, பெரியளவில் பணத்தை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.