முஸ்லிம் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை: பாஜக பேச்சால் சர்ச்சை
, திங்கள், 18 நவம்பர் 2024 (11:07 IST)
முஸ்லிம் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை என்று உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்பி சதீஷ் கவுதம் என்பவர் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒன்பது சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் இருபதாம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், ஆளும் பாஜக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
அதேபோல், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சமாஜ்வாடி கட்சியும் கடும் போட்டியை கொடுத்து வரும் நிலையில், இரு தரப்பினரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி மற்றும் பாஜக கட்சி இடையே தான் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அலிகார் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. சதீஷ் தேர்தல் பிரச்சார மேடையில் பேசிய போது, "நான் கடந்த மூன்று மக்களவைத் தேர்தலில் இந்து சகோதர சகோதரிகளின் வாக்குகளால் தான் வெற்றி பெற்றேன். நான்காவது முறையாகவும் இந்து வாக்குகளால் வெற்றி பெறுவேன்," என்று கூறினார். முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு தேவையில்லை," என்று பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே மேடையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும்போது, " இந்த தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என்பதால் தான் காங்கிரஸ் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதாகவும், ஒன்பது தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்," என்றும் அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்